search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கானா தேர்தல்"

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் வேட்பாளர் அக்பருதீன் ஒவைசி பா.ஜ.க. வேட்பாளரை சுமார் 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். #AkbaruddinOwaisi #Telangnaelection2018
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி தெலுங்கானா ராஷ்டரிய சமிதி வேட்பாளர்கள் 4 இடங்களில் வெற்றிபெற்று 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். இதனால், அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் மீண்டும் இங்கு ஆட்சி அமைக்கும் சூழல் கனிந்துள்ளது.



    இந்நிலையில், இம்மாநிலத்துக்குட்பட்ட சந்திராயன்குட்டா தொகுதியில் போட்டியிட்ட அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் வேட்பாளர் அக்பருதீன் ஒவைசி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. பெண் வேட்பாளர் சையத் ஷெஹ்ஜாதியை சுமார் 80 ஆயிரம் வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றுள்ளார். #AkbaruddinOwaisi #Chandrayanguttaconstituency #Telangnaelection2018
    சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. #AssemblyElections #ElectionResults2018
    தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    5 மாநிலங்களில் சேர்த்து மொத்தமாக 679 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.  இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.



    மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

    இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. #AssemblyElections #ElectionResults2018

    தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை அமைந்தால் சந்திரசேகர ராவ் கட்சிக்கு ஆதரவு கொடுப்போம் என்று பா.ஜனதா அறிவித்துள்ளது. #TRS #BJP
    ஐதராபாத்:

    5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 11-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி (டிஆர்எஸ்) மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    119 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 60 உறுப்பினர்கள் தேவை. இந்தியா டுடே, டைம்ஸ் நவ் உள்ளிட்ட 3 கருத்து கணிப்பில் டிஆர்எஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக பா.ஜனதா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில பா.ஜனதா தலைவர் கே.லட்சுமண் கூறியதாவது:-

    தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்போம். காங்கிரஸ், எம்.ஐ.எம். ஆகியவைதான் எங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆகும். அவர்களை ஆட்சி அமைக்க விடமாட்டோம். இதனால் எங்களது ஆதரவு டிஆர்எஸ் கட்சிக்கு இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தெலுங்கானா தேர்தலில் வாக்காளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் லட்சுமண் நேற்று வெளியிட்டார். #TelanganaAssemblyElection #BJP #Manifesto
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் லட்சுமண் நேற்று வெளியிட்டார்.

    அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    * விழாக்காலங்களில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக பசுமாடுகள் வினியோகிக்கப்படும்.

    * பணம் கொடுத்து மதமாறுவதை தடுக்க மதமாற்று தடை சட்டம் கொண்டு வரப்படும்.

    * 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்.

    * பட்டம் மற்றும் முதுநிலை படிப்பு மாணவிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டிகள்.

    * பட்டதாரி மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வினியோகம்.

    * மாநிலத்தில் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளை பேசுவதற்கு வசதியாக ரூ.100 கோடியில் மொழியியல் போர்டு.

    இவை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பாரதீய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.  #TelanganaAssemblyElection #BJP #Manifesto
    தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் விவசாயிகள் கடனை ஒரே மூச்சில் தள்ளுபடி செய்வோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். #RahulGandhi #Congress
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தீர்மானித்தார். இதையொட்டி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில தேர்தலுக்கான அறிவிப்புடன் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்தது.
     
    டிசம்பர் மாதம் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக உள்ளன.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தெலுங்கானா மாநிலத்தில் இரு இடங்களில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு திரட்டினார்.

    அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பைன்ஸா நகரம் மற்றும் காமாரெட்டி மாவட்டத்தில் சார்மினார் அருகே நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

    நிர்மல் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி தெலுங்கானாவில் விரைவில் மாற்றம் வரும். டெல்லியில் மோடியின் ஆட்சியும், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியும் தூக்கி எறியப்படும் என்று குறிப்பிட்டார்.



    நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. தங்களது விளைபொருள்களுக்கன ஆதார விலை கிடைக்காததால் தெலுங்கானா மாநிலத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

    நான் போலியான பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதற்காக இங்கு வரவில்லை. பொய்யான வாக்குறுதிகளை கேட்க வேண்டும் என்றால் நீங்கள் மோடி அல்லது சந்திரசேகர ராவ் பேசும் கூட்டத்துக்கு செல்ல வேண்டும்.

    இந்த தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் விவசாயிகள் கடன் 2 லட்சம் ரூபாயை ஒரே தவணையில் தள்ளுபடி செய்வோம். அதுமட்டுமின்றி, பருத்தி கொள்முதல் விலை குவின்ட்டாலுக்கு 7 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பழங்குடியினரின் நிலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். பழங்குடியினர் மற்றும் வனப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கான உரிமைகளை பாதுகாக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்படும். வேலையில்லாத வாலிபர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.

    தெலுங்கானாவில் அம்பேத்கர் பெயரால் உருவாக்கப்பட்ட திட்டத்தை  சந்திரசேகர ராவ் மாற்றி விட்டார். 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தீட்டப்பட்ட இந்த திட்டம் ஊழல் செய்யும் நோக்கத்தில் தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் ராஜீப் சாகர், இந்திரா சாகர் திட்டங்களின் மதிப்பும் உயர்த்தப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் ஊழல்தான் பெரிதாக தெரிகிறது. இதன் பலன்களை அவரது குடும்பத்தாரும், நண்பர்களும், உறவினர்களும் அனுபவித்து வருகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

    இதைதொடர்ந்து, ஐதராபாத் கூட்டத்தில் பேசிய ராகுல், நாட்டை பிளவுப்படுத்த முதல்முறையாக ஒரு பிரதமர் முயற்சித்து வருகிறார். இன்று நாடு இருக்கும் நிலையில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு பயப்படுகின்றனர். பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #Congress
    தெலுங்கானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை தனது முதல்கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். #RahulGandhi #RahulTelangana #Telanganapoll
    ஐதரபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தீர்மானித்தார். இதையொட்டி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில தேர்தலுக்கான அறிவிப்புடன் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    டிசம்பர் மாதம் 7-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக உள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை தெலுங்கானா மாநிலத்தில் இரு இடங்களில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு திரட்டுகிறார்.

    அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பைன்ஸா நகரம் மற்றும் காமாரெட்டி மாவட்டத்தில் சார்மினார் அருகே நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

    சார்மினார் அருகே நடைபெறும் நிகழ்ச்சியின்போது அங்கு காங்கிரஸ் கொடியை ஏற்றிவைக்கும் ராகுல் காந்தி, ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், தமிழக முன்னாள் கவர்னருமான கே.ரோசய்யாவுக்கு ராஜீவ் காந்தி சத்பாவனா விருதினை வழங்கவுள்ளார். #RahulGandhi #RahulTelangana  #Telanganapoll
    வருகிற 20-ந்தேதி தெலுங்கானாவில் ராகுல் முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். அன்று அவர் அடிலாபாத் மற்றும் காமரெட்டி மாவட்டங்களில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். #Congress #Rahulgandhi
    தெலுங்கானா:

    தெலுங்கானாவில் டிசம்பர் மாதம் 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளார். இதற்காக அவர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார். வேட்பாளர் தேர்வு நடந்து வரும் நிலையில் அங்கு இப்போதே பிரசாரத்தை தொடங்கி விட ராகுல் முடிவு செய்துள்ளார். வருகிற 20-ந்தேதி தெலுங்கானாவில் ராகுல் முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். அன்று அவர் அடிலாபாத் மற்றும் காமரெட்டி மாவட்டங்களில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். அடுத்தக்கட்டமாக 27-ந்தேதி மீண்டும் தெலுங்கானாவுக்கு வர உள்ளார். அப்போது கரீம்நகர், வாராங்கல் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    தெலுங்கானாவுக்கு வரும் ஒவ்வொரு முறையும் குறைந்தது 5 பொதுக்கூட்டங்களில் பேச ராகுல் தீர்மானித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைவர்கள் செய்து வருகிறார்கள். அடுத்த மாதம் இறுதியில் சுமார் ஒரு வாரம் தெலுங்கானாவில் தங்கியிருந்து தீவிர பிரசாரம் செய்ய ராகுல் வியூகம் வகுத்துள்ளார். #Congress #Rahulgandhi 
    மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களுடன் தெலுங்கானா சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்ற யூகத்துக்கு தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். #TelanganaPolls #eci
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 63 இடங்களில் வெற்றி பெற்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி ஆட்சியமைத்தது. 

    அங்கு அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் அம்மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியான சந்திரசேகர் ராவும், அவரது தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சியினரும் சட்டசபையை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்தனர்.
     
    இதன் தொடர்ச்சியாக நடந்த அமைச்சரவைக் கூட்டம்  கூட்டத்தில், சட்டசபையை கலைப்பது என முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவையின் முடிவை ஏற்று, சட்டசபை கலைப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. 

    இந்த ஆண்டு இறுதிக்குள் மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுடன் தெலுங்கானா சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

    தெலுங்கானா மாநிலத்தில் இப்போதே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? தேர்தலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்வதற்காக ஐதராபாத் நகருக்கு துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையிலான அதிகாரிகள் குழுவை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன்  கடந்த 11-ம் தேதி அனுப்பி வைத்தது.

    அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்த அதிகாரிகள் இதுதொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் கமிஷனரிடம் சமர்ப்பித்துள்ளனர். இதன் அடிப்படையில் 4 மாநில தேர்தல்களுடன் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்று தேர்தல் கமிஷன் தீர்மானித்துள்ளதாக சமீபத்தில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இந்நிலையில், இந்த தகவலை தெலுங்கானா மாநில தேர்தல் அதிகாரி ரஜத் குமார் இன்று மறுத்துள்ளார். 

    இதுதொடர்பாக இன்றிரவு அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர்  ஆகிய நான்கு மாநிலங்களுடன் தெலுங்கானா சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என இன்றைய நாளிதழ்களில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலானவை. 

    இதுபோல் தேர்தல் தொடர்பான செய்திகளை வெளியிடும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் உரிய அதிகாரியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின்னரே பிரசுரிக்க வேண்டும் என தெலுங்கானா மாநில தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. #TelanganaPolls #ECIteamvisitHyderabad #ECI
    நடிகை விஜயசாந்தி தெலுங்கானா பிரசார களத்தில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்துடன் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று ராகுல் அறிவித்துள்ளார். #Congress #RahulGandhi #Vijayashanti
    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வந்தது.

    அங்கு முன் கூட்டியே தேர்தலை சந்திக்கும் வகையில் சமீபத்தில் சட்டசபையை சந்திரசேகரராவ் கலைத்தார். இதனால் தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமி‌ஷன் தயாராகி வருகிறது.

    தெலுங்கானாவில் இப்போது தேர்தல் நடந்தால் சந்திரசேகரராவ் அமோக வெற்றி பெறுவார் என்று அடுத்தடுத்து வந்த கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்தது. தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் என்று தெரிகிறது.


    இதையடுத்து காங்கிரஸ் கட்சியும் தெலுங்கானா தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. தெலுங்கானா காங்கிரசாரை உற்சாகப்படுத்தும் வகையில் புதிய கமிட்டிகளை உருவாக்கி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.

    மொத்தம் 10 குழுக்களை ராகுல்காந்தி உருவாக்கி இருக்கிறார். பிரசார கமிட்டி தலைவராக மல்லுப்பட்டி விக்ரமர்கா அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம்குமார் ரெட்டி தலைமையில் 14 பேர் கொண்ட தேர்தல் கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொறுப்பை முன்னாள் துணை முதல்-மந்திரி ராஜ நரசிம்மாவிடம் ராகுல் ஒப்படைத்துள்ளார்.

    தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பு குழுவில் மொத்தம் 50 தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். யார்-யார் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற பட்டியலையும் ராகுல் அறிவித்துள்ளார்.

    நடிகை விஜயசாந்திக்கு பிரசாரத்தில் முக்கியத்துவம் அளிக்க ராகுல் உத்தரவிட்டுள்ளார். விஜயசாந்தி தெலுங்கானா பிரசார களத்தில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்துடன் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று ராகுல் அறிவித்துள்ளார்.

    இதனால் தெலுங்கானா காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர். #Congress #RahulGandhi #Vijayashanti
    தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #TelanganaPolls
    புதுடெல்லி:

    ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 63 இடங்களில் வெற்றி பெற்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி ஆட்சியமைத்தது. அங்கு அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியான சந்திரசேகர் ராவும், அவரது தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சியினரும் சட்டசபையை கலைத்து முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளனர்.



    இதற்காக கடந்த சில நாட்களாக கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்றும் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், சட்டசபையை கலைப்பது என முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவையின் முடிவை ஏற்று, சட்டசபை கலைப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். மேலும் புதிய அரசு அமைவது வரை தற்காலிக முதல்-மந்திரியாக தொடருமாறு சந்திரசேகர் ராவை அவர் கேட்டுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து மாநில சட்டசபை கலைப்பு குறித்த அறிவிப்பை கவர்னர் அலுவலகம் முறைப்படி வெளியிடும் என தெரிகிறது. இந்த கலைப்பு நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது. இதற்கிடையே தெலுங்கானா சட்டசபை கலைப்பு நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தலைமை செயலாளர் சைலேந்திர குமார் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. இது தொடர்பாக இன்று  மதியம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் இந்த ஆண்டு டிசம்பரில் மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுடன் தெலுங்கானா சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து இன்று அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #TelanganaPolls
    தெலுங்கானா மாநில சட்டசபை கலைக்கப்பட்டுள்ள நிலையில், 105 தொகுதிகளுக்கான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் வேட்பாளர்களை முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று அறிவித்தார். #Telangana #ChandrashekarRao #TRSCandidates
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சி காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், ஆட்சியை கலைத்து விட்டு முன்கூட்டியே சட்டசபை தேர்தலை சந்திக்க சந்திரசேகரராவ் முடிவு செய்தார். அதன்படி இன்று அமைச்சரவையை கூட்டி சட்டசபை கலைக்க முடிவு செய்யப்பட்டது.



    இதையடுத்து ஆளுநர் நரசிம்மனை சந்தித்த சந்திரசேகர ராவ், சட்டசபையை கலைப்பது தொடர்பான பரிந்துரை கடிதத்தை வழங்கினார். இந்த பரிந்துரையை ஆளுநர் நரசிம்மன் ஏற்றுக்கொண்டார். அதேசமயம், புதிய அரசு அமையும் வரை ஆட்சியை தொடருமாறு முதல்வர் சந்திரசேகராவிடம் கேட்டுக்கொண்டார். ஆளுநர் விடுத்த கோரிக்கையை சந்திரசேகர ராவ் ஏற்றுக்கொண்டார்.

    இதற்கிடையே சட்டசபைத் தேர்தல் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய சந்திரசேகர ராவ், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று  வெளியிட்டுள்ளார். மொத்தம் உள்ள 119 தொகுதிகளில், இன்று வெளியிட்டுள்ள பட்டியலில் 105 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்களை அறிவிக்க முடிவு செய்துள்ளார்.

    புதிதாக உதயமான தெலுங்கானாவில் 2014-ம் ஆண்டு நடந்த முதல் சட்டசபை தேர்தலில மொத்தம் உள்ள 119 இடங்களில் சந்திரசேகரராவின் கட்சி 90 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது. #Telangana #ChandrashekarRao #TRSCandidates
    ×